தமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி இன்று மக்கள் விரும்பும் காமெடியனாக உயர்ந்துள்ளார் நடிகர் சதீஷ். எதிர்நீச்சல், மான் கராத்தே, தமிழ் படம், ரெமோ போன்ற படங்களில் எதார்த்தமான காமெடியை வெளிப்படுத்தியிருப்பார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். 

Sathish Trolls Actors Jai And Vaibhav

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்களில் சதீஷும் ஒருவர். படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். இந்நிலையில் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டாமை படத்தின் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர்கள் வைபவ் மற்றும் ஜெய் இருவரை டேக் செய்துள்ளார். பொண்ணுங்க ப்ரொஃபைல் ( முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்) ஓப்பன் பண்ணா நீங்க தான் இருக்கீங்க என்று கேலி செய்துள்ளார். 

Sathish Trolls Actors Jai And Vaibhav

சமூக வலைதள பதிவுகளில் நண்பர்களை டேக் செய்வது இணையவாசிகளின் தீராத பழக்கம். இந்த பழக்கம் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. சதீஷின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த பதிவின் கீழ் பிரேம்ஜியும் கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.