சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது புதுப்பொலிவுடன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் சசிகுமாருடன், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் நடித்துள்ளார். நந்தகோபால் இந்த படத்தை தயாரித்துள்ளார். 

sasikumar barani sasikumar

நாடோடிகள் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

anjali sasikumar samuthirakani

படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியானது. முதற் பாகம் போலவே இந்த படமும் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம். சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர் மகன், பரமகுரு, கொம்புவச்ச சிங்கம்டா போன்ற படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.