நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

Sasikumar

இதுகுறித்து நடிகர் சசிகுமார் உருக்கமான வீடியோவை பதிவு செய்துள்ளார். நமது பாதுகாப்புக்காக மருத்துவர்கள், போலீஸார், தூய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். ஆனால் சமீபத்தில் கேள்விப்படும் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. மருத்துவர்களிடம் அந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நம்மை பாதுகாப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்காக மரியாதையை கொடுக்க வேண்டும். மனிதம் வளரனும் என வீடியோவில் பேசியுள்ளார். 

Sasikumar

சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன், கொம்புவச்ச சிங்கம்டா, ராஜவம்சம் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. சமீபத்தில் காவல் அதிகாரிகளுடன் இணைந்து களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிஜ வாழ்விலும் ஹீரோவாக திகழும் சசிகுமார் அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.