கென்னடி கிளப் படத்தின் புதிய பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | August 13, 2019 17:41 PM IST
சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப்.நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் நாயகி காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார்.இயக்குனர் பாரதிராஜா, சூரி,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை சீனாவில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.Screen Scene நிறுவனம் இந்த படத்தை விநியோகம் செய்கிறது.இந்த படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.