தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. தற்போது முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். 

Sasikumar In Munthanai Mudichu Movie Remake

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. பல ஆண்டுகள் கடந்தாலும், இப்படத்தில் இடம்பெற்ற முருங்கக்காய் வசனம், இன்று வரை ட்ரெண்டில் உள்ளது. 

Sasikumar In Munthanai Mudichu Movie Remake

இந்நிலையில் 37 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரீமேக்கை பாக்யராஜ் உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் யார் யார் நடிக்கவுள்ளனர் என்ற அப்டேட் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை JSP சதீஷ்குமார் தயாரிக்கவுள்ளார். நிச்சயம் இந்த காலத்திற்கு ஏற்ற படமாக இருக்கும் என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.