உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோர வடிவத்தை காட்டி வருகிறது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கள் அனைத்து துறைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதில் விவசாயமும் ஒன்று. விவசாய பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தலும், விளை பொருட்களுக்கு வாங்க ஆளில்லாததால் அவை வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Sasikumar Helps Farmer In Corona Lockdown

இந்நிலையில் மதுரையை சேர்ந்த வாழை விவசாயி ஒருவர், அறுவடை செய்ய வழியின்றி தவித்து வருவதாக வீடியோவில் கூறி இருந்தார். அந்த வீடியோவை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

Sasikumar Helps Farmer In Corona Lockdown

இதை பார்த்த சசிகுமார், அந்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் பண உதவி செய்திருக்கிறார். ஆனால் அந்த விவசாயியோ உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன் என கூறியுள்ளார். சசிகுமார் கைவசம் ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்கள் உள்ளது.