13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராகும் சசிகுமார்.. ஹீரோவாக பிரபல இயக்குனர்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

தமிழ் சினிமாவில் மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் சசிகுமார் - Sasikumar direct movie after 13 years here the details | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களான பாலா மற்றும் அமீர் ஆகியோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி கடந்த 2008 ம் ஆண்டு மதுரையை கதைக்களமாக வைத்து ரத்தம் தெறிக்கும் திரைக்கதையை உருவாக்கி சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சசிக்குமார்.  தயாரித்து இயக்கிய சுப்பிரமணியம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்திருப்பார். முதல் படத்திலே இந்திய அளவு கவனம் பெற்ற இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்கள் சாதனை படைப்பார் என்று எண்ணிய போது அதற்கு மாறாக கதாநாயகனாக களம் இறங்கினார். இடையில் ஈசன் என்ற படத்தை இயக்கி வரவேற்பை பெற்றார். கதாநயாகனாக தொடர்ந்து பல திரைப்படங்களில் சசிகுமார் நடித்து வந்தார். அதன்படி நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி,வெற்றிவேல், கிடாரி,நாடோடிகள் 2, உடன் பிறப்பே ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்று சசிக்குமார் பிரபல ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘அயோத்தி திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கதாநாயகனாக சசிகுமார் மக்களின் கவனத்தை ஈர்த்தாலும் இயக்குனராக சசிக்குமார் மிகப்பெரிய கவனத்தை அன்றே ஈர்த்தார். அவரது சுப்பிரமணியபுரம் இன்றும் பல முக்கிய மேடைகளில் எடுத்துக் காட்டாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மக்களின் குணம். மண் சார்ந்த படைப்பியல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இன்றும் காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பெரும்பான்மையான ஆசையாக சசிக்குமார் இயக்குனராக மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது தான்.

இந்நிலையில் சசிக்குமார் மீண்டும் 13 ஆண்டுகளுக்கு பின் தமிழில் இயக்குனராக களம் இறங்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது. அந்த படம் பீரியட் படமாக இருக்கும் என்றும் அப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் நடிக்கவுள்ளதாகவும் வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் பகிர்ந்து உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் பல மேடைகளில் சுப்பிரமணியபுரம் படத்தை மேற்கோளிட்டு பேசியதுண்டு மற்றும் அனுராக் காஷ்யாம் நயன்தாரா, அதரவா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.. – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விவரம் இதோ..
சினிமா

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.. – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விவரம் இதோ..

ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் லைகா நிறுவனம்.. -  பிரபல ஹீரோவின் புதுப்பட போஸ்டர் இதோ..
சினிமா

ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் லைகா நிறுவனம்.. - பிரபல ஹீரோவின் புதுப்பட போஸ்டர் இதோ..

சினிமா

"பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் LOADING!"- மிரட்டலான வீடியோவோடு வந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!