ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

sasikumar

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படம் உருவான விதம் குறித்தும், படத்தின் சிறப்பாம்சம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் சசிகுமார்.

sasikumar

அப்போது பேசியவரிடம், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரை வளர்ச்சி குறித்த கேள்வியை கேட்கப்பட்டது. சுந்தரபாண்டியன் படத்தில் சிறிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருப்பார். பிறகு பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டாருடன் சசிகுமாருக்கு இணையாக தரமான ஓர் கேரக்டரில் அசத்தியிருப்பார். விஜய்சேதுபதியின் வளர்ச்சி மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார்.