ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

sasikumar bharathi

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படம் உருவான விதம் குறித்தும், படத்தின் சிறப்பாம்சம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் சசிகுமார்.

sasikumara

அப்போது பேசியவர் சுப்ரமணியபுரம் பற்றி கேட்டதற்கு, என்னால் கூட முடியாது. தற்போது அதற்கான சிந்தனையும் இல்லை. சுப்ரமணியபுரம் நன்றாக உள்ளது. கடந்த 11 வருடங்களாக இதை கூறி வருகிறார்கள். இந்த பெயரே போதும் அதை கெடுக்க விரும்பவில்லை. நல்ல படம் என்ற பெயரை பெற்று விட்டது. அதுவே போதும் என்றார். இயக்குவேன் ஆனால் சுப்ரமணியபுரம் 2 இயக்க மாட்டேன் என்று முடிவாக கூறியுள்ளார்.