இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1980-களில் வடசென்னையில் பிரபலமான குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் (ஜூலை 22) இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.

இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரையை சார்ந்த குத்துச்சண்டை வீரராக கபிலன் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு எதிராக இடியப்பா பரம்பரையை சார்ந்த குத்துச்சண்டை வீரராக ஜான் கொக்கென் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருக்கும் ஜான் கொக்கெனின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமூக வலைதளங்களில் வேம்புலி கதாபாத்திரம் குறித்து பலரும் ஜான் கொக்கெனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ஜான் கொக்கென் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். முன்னதாக தல அஜீத்துடன் வீரம் திரைப்படத்தில் ஜான் கொக்கென் நடித்திருந்த நிலையில் தற்போது, 

நானே என்னை நம்புவதற்கும், என்னை அதிகமாக ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றி அஜித் சார்...

வீரம் படத்தின் படப்பிடிப்பின்போது உங்களோடு நான் கழித்த நாட்கள் என் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஒரு நல்ல மனிதனாகவும் ஒவ்வொரு நாளும் கடின உழைப்பாளியாகவும் நான் மாறுவதற்கு நீங்கள் தான் எனக்கு முன்னோடி.

இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் லவ் யூ அஜித் சார்!!!

என பதிவிட்டிருக்கிறார்.நடிகர் ஜான் கொக்கெனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Kokken (@highonkokken)