நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த நெருங்கி வா முத்தமிடாதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஷபீர் கள்ளாரக்கல். தொடர்ந்து ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த அடங்கமறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த பேட்ட திரைப்படத்திலும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த டெடி திரைப்படத்திலும் நடித்துள்ளார் நடிகர் ஷபீர்.

சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். 1970-80களில் பிரபலமான குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் குத்து சண்டை வீரராக ஷபீர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் சபீர், தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. டான்சிங் ரோஸின் வாத்தி கம்மிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ...