தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில்  கடைசியாக  கோடியில் ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி மற்றும் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. அக்னிச்சிறகுகள் படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து இயக்கி நடிக்கும் விஜய் ஆன்டனியின் நடிப்பில், அடுத்து கொலை என்னும் க்ரைம் த்ரில்லர் படமும் தயாராகி வருகிறது. மேலும் தமிழ்படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார் விஜய் ஆன்டணி. முன்னதாக முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், ரமணா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் சூப்பர் ஹிட்டான சலீம் திரைப்படத்தின் 2-ம் பாகமாக தயாராகும் மழை பிடிக்காத மனிதன் (சலீம் 2) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பிடிக்காத மனிதன் படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.