தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Santosh Sivan Explanation on Thuppaki 2 Project

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 65.இந்த படம் குறித்து பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

Santosh Sivan Explanation on Thuppaki 2 Project

இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்ககுகிறார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர் என்றும் ,இந்த படம் துப்பாக்கி 2வாக இருக்கலாம் என்றும்  தகவல்கள் சில மாதங்களாக  பரவியது.சில நாட்களுக்கு முன் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி படத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.துப்பாக்கி 2 படம் உருவாகிறதா போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவந்தனர்.இதற்கு பதிலளித்துள்ள சந்தோஷ் சிவன் தான் பணியாற்றிய படங்களின் புகைப்படத்தை பகிர்ந்ததாகவும் இது அது படம் குறித்த தகவல் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.