தேசாந்திரி பாடல் உருவான விதம் குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு !
By Sakthi Priyan | Galatta | March 18, 2020 13:43 PM IST
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் மார்ச் 6-ம் தேதி திரைக்கு வந்த படம் ஜிப்ஸி. நடாஷா சிங் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். குதிரை வைத்து வித்தை காட்டும் கலைஞராக நடித்துள்ளார் நடிகர் ஜீவா. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் படத்திலிருந்து தேசாந்திரி பாடல் வீடியோ வெளியானது. சித்தார்த் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடல் உருவான விதம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த பாடலை தனது சொந்த ஊரில் 2002-ம் ஆண்டு கம்போஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Full Video: Do You Love Me | Baaghi 3 | Disha Patani | Tiger Shroff
18/03/2020 01:50 PM
Actor Karthi's request to people on Corona virus prevention! Check out!
18/03/2020 01:24 PM
Official: Ko and Anjaathey fame Ajmal Ameer to act in Nayanthara's Netrikann!
18/03/2020 11:56 AM