காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடித்த தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான A1 திரைப்படம் சீரான வரவேற்பை பெற்றது.

santhanam

ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி படத்திலும், கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்திலும் நடித்து வருகிறார்.

santhanam

santhanam

தற்போது நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் உடன் கைகோர்க்கவுள்ளார். இந்த படத்தை பங்கஜ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல்-ன்-ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் மட்டுமே சந்தானம் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.