கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். 

Santhanams Dikkilone First Look Poster

யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

Santhanams Dikkilone First Look Poster

3 நாட்களுக்கு சந்தானத்தின் 3 கதாபாத்திரத்தின் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியானது. இந்த போஸ்டர் இணையத்தை அசத்தி வருகிறது.