தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து அசத்தலான ஹீரோவாக மாறியிருப்பவர் நடிகர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நகைச்சுவை திரைப்படம் ஏ1. ஜான்சன் இயக்கிய இந்த படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படமாக அமைந்தது. 

dakalti

அதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள படம் டகால்டி. இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

santhanam

santhanam

தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இதன் டீஸர் வரும் டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று பதிவு செய்துள்ளார் சந்தானம்.