தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் பல நகைச்சுவை திரைப்படங்களில்  மக்களை மகிழ்வித்து வருகிறார். கடைசியாக நடிகர் சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டைம் ட்ராவல் ஃபேண்டசி திரைப்படமாக தயாராகியிருக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் 'டிக்கிலோனா' படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறது. பிரபலமான ஜீ5 OTT தளத்தில் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நேரடியாக டிக்கிலோனா திரைப்படம் வெளியாகிறது. சந்தானத்தின் நகைச்சுவை சர வெடி திரைப்படங்களின் வரிசையில் டிக்கிலோனா-வும் தவறாமல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.