தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவையை மையப்படுத்திய பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக சந்தானம் நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.

தெலுங்கில் ஸ்பை த்ரில்லர் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தயாராகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். 

மேயாதமான் & ஆடை என தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்துடன் இணைந்து குலு குலு படத்தில் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

கலகலப்பான என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலு குலு திரைப்படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் குலு குலு மோஷன் போஸ்டர் இதோ…