தமிழ் திரை உலகின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சந்தானம் தொடர்ந்து நகைச்சுவையை மையப்படுத்திய கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசியாக வெளியான டிக்கிலோனா திரைப்படமும் சந்தானத்திற்கு வெற்றியைத் தேடித் தர, அடுத்ததாக சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவாச அத்ரெயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குனர் மனோஜ் பீதா இப்படத்தை இயக்குகிறார். Labrynth பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.