முன்னணி நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இதனையடுத்து தொடர்ந்து நகைச்சுவையை மையப்படுத்தி நகரும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து கதாநாயகனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படமும் நகைச்சுவையில் ரசிகர்களை மகிழ்வித்தது.அடுத்ததாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் நடிகர் சந்தானம்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் இயக்குனர் ஸ்வரூப் RSJ இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது ஏஜென்ட் கண்ணாயிரம். 

ஏஜென்ட் கண்ணாயிரமாக நடிகர் சந்தானம் நடிக்க, வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குனர் மனோஜ் பீதா இயக்குகிறார். LABRYNTH FILMS தயாரிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.