தமிழ் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். முன்னதாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த குலுகுலு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீ நிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் காமெடி ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக  தயாராகியிருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 15-வது திரைப்படமாக சந்தானம் நடித்துள்ள திரைப்படம் கிக். பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் கிக் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ள கிக் திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். கிக் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கிக் திரைப்படத்தின் முதல் பாடலாக சாட்டர்டே இஸ் கம்மிங்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த பாடல் இதோ…