தில்லுக்கு துட்டு 2,A1 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களில் வெற்றியோடு இந்த ஆண்டை துவங்கியுள்ளார் சந்தானம். இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் டிக்கிலோனா.பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Santhanam Dikkiloona Harbajan Singh Plays Villain

கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்றும்,இது டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Santhanam Dikkiloona Harbajan Singh Plays Villain

இந்த படத்தில் நட்பே துணை புகழ் அனகா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா புகழ் ஷிரின் இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர்.யோகி பாபு,ஆனந்தராஜ்,முனீஷ்காந்த்,மொட்ட ராஜேந்திரன்,நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தில் ஹர்பஜன் சிங் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Santhanam Dikkiloona Harbajan Singh Plays Villain