சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் பட டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | January 19, 2022 20:42 PM IST

விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.
இவர் அடுத்ததாக ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய்ஸ்ரீநிவாஸா ஆத்ரேயா.இந்த படத்தின் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.
மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்குகிறார்.Labrynth Films நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சந்தானத்தின் பிறந்தநாள் வரும் ஜனவரி 21ஆம் தேதி வருவதை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் ரிலீசை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
#NikilNews23 @iamsanthanam ‘s #AgentKannayiram Teaser will be Unveiled on Jan 21st on his Birthday 🎉 🎂 ! #AKTeaser
— Nikil Murukan (@onlynikil) January 19, 2022
Directed by @manojbeedha_dir@thisisysr Musical#NM pic.twitter.com/YPZ0xxauSG
Agent Sai Srinivasa Atreya Teaser Released
24/11/2018 11:40 AM
Vijay as a stylish police agent?
05/08/2011 12:00 AM
21/02/2008 12:00 AM
10/04/2007 12:00 AM