விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.

இவர் அடுத்ததாக ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய்ஸ்ரீநிவாஸா ஆத்ரேயா.இந்த படத்தின் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்குகிறார்.Labrynth Films நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ரியா சுமன்,புகழ்,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் நாயகன் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரகளையான இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.