கோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்று ஐபிஎல் தொடர்.தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,இந்த தொடர் நடக்குமா இல்லையா என்ற பல போராட்டங்கள் வந்து சென்றன.முக்கிய ஸ்பான்சர்களில் மாற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை இந்த வருட ஐபிஎல் தொடர் சந்தித்துள்ளது.ஒருவழியாக இந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.

12 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 13ஆவது சீசன் UAE-யில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எட்டு அணிகளும் தங்கள் திறமையை நிரூபிக்க போராடி வருகின்றனர்.கிட்டத்தட்ட டதொடர் முடியப்போகும் நிலையில் இன்னும் எந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரியாமல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் ஆஸ்தான அணியான சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏராளமான ஆதரவு உள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.கடந்த உலகக்கோப்பை 2019 அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு , தற்போது தான் தோனி களத்தில் இறங்கப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.இந்த முறை சென்னை அணிக்கு சரியானதாக அமையவில்லை முதல்முறையாக போட்டியை விட்டு லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

இந்த தொடரின் பைனல் போட்டி நாளை மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.இந்த  போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும்,டெல்லி அணி வீரருமான அஸ்வின் தனது யூடியூப் சேனலுக்காக சில வீரர்களை இன்டெர்வியூ செய்து வந்தார்.அந்த வகையில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சம்சனை பேட்டியெடுத்த பொழுது கேரளாவை சேர்ந்த அவர் தமிழ் எப்படி சரளமாக பேச கற்றுக்கொண்டார் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த சாம்சன் தான் ரஜினியின் பெரிய ரசிகர் என்றும் ரஜினி,விஜய் படங்களை விரும்பி பார்த்து தமிழ் கற்றுக்கொண்டேன் என்றும்,சக தமிழக வீரர்களிடமிருந்தும் தமிழ் கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.