குளிர் 100 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ். ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

Sanjeev Shares His Daughter Photo In Instagram

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது. படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். 

Sanjeev Shares His Daughter Photo In Instagram

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பு நிறைந்த பதிவை வெளியிட்டுள்ளார். பிறந்தவுடன் தனது மகளை முதல் முறையாக கையில் வாங்கிய போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், என் மகள் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவளுக்கான உலகத்தை நான் அமைத்து தருவேன் என பதிவு செய்துள்ளார். சஞ்சீவ் வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My baby girl is one of my greatest treasures in life And I would give her the world if I can

A post shared by sanjeev (@sanjeev_karthick) on