ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். 

SanjeevAlyaManasa

கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் இந்த அழகான ஜோடியை சமூக வலைத்தளங்களில் வாழ்த்தினர். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. 

SanjeevAlyaManasa SanjeevAlyaManasa

இதுகுறித்து திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து, யாரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.