இயக்குனர் பண்ணீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா. அதனைத்தொடர்ந்து கோ, அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு.

Sanjana Singh Shares Water Can Workout Video

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஜிம் மூடப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகின்றனர். 

Sanjana Singh Shares Water Can Workout Video

இந்நிலையில் நடிகை சஞ்சனா தண்ணீர் கேன் கொண்டு உடற்பயிற்சி செய்கிறார். வீட்டின் மாடியில் நின்றபடி தண்ணீர் கேனை கழுத்தில் வைத்து உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.