கதவில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் சஞ்சனா ! வைரலாகும் வீடியோ
By Sakthi Priyan | Galatta | May 09, 2020 15:50 PM IST

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா. அதனைத்தொடர்ந்து கோ, அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஜிம் மூடப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சஞ்சனா தனது வீட்டுக்கதவில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காலை வணக்கம், வாழ்க்கை எப்பொழுதும் நமக்கு விருப்பமானது போல் இருக்காது. ஆனால் சிறப்பான வழியில் நாம் வாழ முடியும். என்று குறிப்பிட்டுள்ளார்.
Raghava Lawrence's important request to Thalapathy Vijay and Anirudh Ravichander
09/05/2020 04:37 PM
Yaamirukka Bayamey 2 officially announced - sequel plan on cards!
09/05/2020 03:29 PM
Actor Aruldoss waives off his full salary to help producers - massive respect!
09/05/2020 01:45 PM