விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்த படம் சங்கத்தமிழன். சமீபத்தில் திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றது இப்படம். இயக்குனர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர்.

vijaysethupathi

காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்தார், எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனித்தனர்.

sangathamizhan

தற்போது படத்தின் அழகு அழகு பாடல் வீடியோ வெளியானது. ஷ்வேதா மோகன் பாடிய இந்த பாடல் வரிகளை கார்கி எழுதியுள்ளார்.