தமிழ் திரையுலகில் சிறந்த நடனக்கலைஞர்களில் ஒருவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை தெரியாதவர்களே இருக்கவே முடியாது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். 

Sandy

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். 

Sandy

இந்நிலையில் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லண்டன் சென்ற போது வீதியில் இறங்கி லுங்கி, பனியனுடன் டான்ஸ் ஆடியுள்ளார். அப்போது அங்கு போலீஸ் நிற்க, அப்படியே பின்வாங்கி, அமைதியாக திரும்புவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார். சாண்டியின் இந்த வீடியோ பதிவு நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ayo police-u 😂 fun time in london

A post shared by SANDY (@iamsandy_off) on