கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பாதித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருக்குமாறு திரைப் பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 

Sandy

தமிழ் திரையுலகில் சிறந்த நடனக்கலைஞர்களில் ஒருவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை தெரியாதவர்களே இருக்கவே முடியாது. இந்நிலையில் சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது வீட்டிலேயே டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. 

Master

அனிருத் இசையில் உருவான வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. காகா பாலா பாடிய இந்த பாடலில் தளபதியின் நடனத்தை பார்க்க மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். தினேஷ் மாஸ்டர் இந்த பாடலுக்கு கோரியோக்ராஃப் செய்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vaathi coming ❤️

A post shared by LaLa❤️ (@sandysylvia_official) on