இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

sandy

sandy

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் மாதம் 12-ம் தேதி ட்ரைலர் வெளியாகவுள்ளது.

sandy

sandy

விஜய் குரலில் வெளியான வெறித்தனம் பாடலுக்கு சாண்டி நடனம் ஆடியுள்ளார். நடந்து முடிந்த பிக்பாஸ் மூன்றாம் சீசனில் சாண்டி இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார் என்பது நாம் அறிந்தவையே. கீழ் உள்ள லிங்கில் வீடியோ உள்ளது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், சாண்டியின் மகள் லாலாவும் நடனமாடி மகிழ்ந்தார்.