தனக்கே உரித்தான பாணியில் ஹீரோ - வில்லன் என எந்தவிதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக ஹிந்தி நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த FARZI வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோ வில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

முன்னதாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கர் உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே  புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மைக்கேல்.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க அதிரடி ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகியுள்ள மைக்கேல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Amidst All the Chaos…He found Love ♥️

Welcoming you to the Madness this 20th October 🔥#MichaelTeaser#MICHAEL👊🏾 @sundeepkishan @VijaySethuOffl @itsdivyanshak @menongautham @varusarath5 @jeranjit @anusuyakhasba @itsvarunsandesh @SamCSmusic @SVCLLP @KaranCoffl pic.twitter.com/Uo2WaiPEV2

— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) October 14, 2022