திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனராய் தமிழ் திரையில் கால் பதித்தவர் சுப்ரமணியம் சிவா. அதன் பிறகு பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கினார். வட சென்னை மற்றும் அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

vellaiyaanai samuthirakani

தற்போது சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடிக்கிறார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை. இதில் ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எ.எல்.ரமேஷ் படத் தொகுப்பு செய்கிறார். 

samuthirakani samuthirakani

யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்திலிருந்து வெண்ணிலா பாடல் சமீபத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய இந்த பாடலை ராஜூமுருகன் எழுதியுள்ளார்.