விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா நடித்து வரும் திரைப்படம் தலைவி. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தின் இசை ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும் என்றும் இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவித்திருந்தார். 

தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர். 

ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்பட்டதாம். அதற்காக கங்கனா prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அதன் பின் தன் உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார். 

தலைவி படத்தில் முக்கிய ரோலில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இது குறித்து பதிவு செய்த சமுத்திரக்கனி, தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது...மிக்க மகிழ்ச்சி... பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய், செல்வி. கங்கனா ரணாவத், திரு.அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..வெல்வோம் என பதிவு செய்துள்ளார் சமுத்திரக்கனி. 

இந்த வருடம் சமுத்திரக்கனிக்கு சிறப்பான ஆண்டு என்றே கூறலாம். தெலுங்கில் வெளியான அலவைகுந்தப்புறமுலோ படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின் நாடோடிகள் 2, எட்டுத்திக்கும் பற, வால்டர் ஆகிய படங்களில் நடித்தார். சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் எம்ஜிஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார்.