தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சாமி ஸ்கொயர். சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்த சாமி திரைப்படத்தின் 2வது பாகமாக வெளிவந்தால் சாமி ஸ்கொயர் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

இதனையடுத்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் AV33 படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார், இத்திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் யோகிபாபு, அம்மு அபிராமி,புகழ் மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சக்திவேல் தயாரிப்பில் உருவாகி வரும் AV33 படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும்போது காயமடைந்த நடிகர் அருண்விஜய் காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது AV33 திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படபிடிப்பில் இணைந்துள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் சமுத்திரகனி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.