தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. கடைசியாக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக வெளிவந்த தலைவி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக விரைவில் வெளிவரவுள்ள சிவகார்த்திகேயனின் டான், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR, ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரகனி & தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் விநோதய சித்தம் திரைப்படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது.

மேலும் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், முனிஸ்காந்த் ஆகியோருடன் இணைந்து நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள விநோதய சித்தம் திரைப்படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று விநோதய சித்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இயக்குனரும் நடிகருமான M.சசிகுமார் வெளியிட்ட இயக்குனர் சமுத்திரகனியின் விநோதய சித்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...