சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்தார் சமீரா. இந்த அழகான தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி, சமீபத்தில் காஸ்டிங் கவுச் பற்றி மனம் திறந்தார். அது பற்றி பேசியவர் ஒரு பாலிவுட் ஹீரோ தன்னிடம் காஸ்டிங் கவுச் விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கூறியதாக தெரிவித்தார். அதற்கு பிறகு நான் அந்த ஹீரோவுடன் அவர் பணியாற்றவே இல்லை என்பதையும் பதிவு செய்திருந்தார். சமீராவின் துணிச்சலான குணம் பலரையும் கவர்ந்தது. 

இந்நிலையில் ஃபிட்னஸ் டிப்ஸ் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா ரெட்டி பதிவு செய்துள்ளார். அதிகாலை யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நேர கணக்கில் டயட் இருப்பது, இரவு வேலையில் ஸ்னாக்ஸ் சாப்பிடாமல் இருப்பது போன்ற விஷயங்கள் பற்றி பதிவிட்டுள்ளார். பேட்மிட்டன், சைக்ளிங் போன்றவற்றை பற்றியும் பதிவிட்டுள்ளார் சமீரா. இந்த வீடியோ ஃபிட்னஸ் பிரியர்களை ஈர்த்து வருகிறது.

சில நாட்கள் முன்பு விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தில் சமீரா நடிக்கப்போகிறார் என்ற வதந்திகள் கிளம்பியது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameera Reddy (@reddysameera)