சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான glimpse இதோ..

சமந்தாவின் குஷி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது - Samantha Vijay Devarakonda Kushi Movie Release Date announced | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கிய திரைபிரபலங்களில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிக முக்கியமான நடிகையாக வலம் வருபவர். உச்ச நடிகர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல் தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். முன்னதாக பாலிவுட் தொடராக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான ‘பேமிலி மேன்’ தொடர் மூலம் இந்திய முழுவதும் பாராட்டுகளை பெற்ற சமந்தா. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இவரது கதீஜா கதாபாத்திரம் ரசிகளிடம் டிரெண்ட் ஆனது. அதே நேரத்தில் தெலுங்கில் யசோதா திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே சமந்தா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சாகுந்தாலம்’ திரைப்படம் சில காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் பான் இந்திய திரைப்படமாக வரும் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இது மட்டுமல்லாமல் ஹாலிவுட் இயக்குனர்  தயாரிப்பில் சிடாடேல் இந்திய வடிவில் முதன்மை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

வரிசைகட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சமந்தா. பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘குஷி’ காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் சில காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது. பின் இந்த ஆண்டு விறுவிறுப்பாக இந்த படத்தை கையிலெடுத்துள்ளது படக்குழு முதல் பார்வை தொட்டே ரசிகர்களின் எதிர்பார்பை கொண்டுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம் மாதம் வெளியாகும் என்று அட்டகாசமான போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனையடுத்து புதிய போஸ்டரை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

#Kushi ❤️
Sept 1st.

With full love,@Samanthaprabhu2 @ShivaNirvana @MythriOfficial @HeshamAWMusic & your man. pic.twitter.com/97rT3t8zoC

— Vijay Deverakonda (@TheDeverakonda) March 23, 2023

சமந்தா விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் குஷி திரைப்படத்தை மஜிலி, டக் ஜெகதீஸ் ஆகிய படங்களை இயக்கிய சிவா நிர்வாண இயக்குகிறார். மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய பிரவின் புடி படத்தொகுப்பு செய்து வருகிறார். முன்னதாக சமந்தா பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ வை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தது குஷி படக்குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்..  வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

வெற்றி மாறன் நடிகர் சூரிக்கு சொன்ன மூன்று கதைகள்.. வைரலாகும் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் –  வைரலாகும் புகைப்படங்கள்  இதோ..
சினிமா

சென்னைக்கு பறந்த லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படக்குழுவினர் – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

தொடங்கியது காந்தாரா 2.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  படக்குழு கொடுத்த அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

தொடங்கியது காந்தாரா 2.. உற்சாகத்தில் ரசிகர்கள் - படக்குழு கொடுத்த அட்டகாசமான அப்டேட் இதோ..