யசோதா படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சமந்தா !
By Aravind Selvam | Galatta | December 06, 2021 20:36 PM IST

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.
இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம் என பிஸியாக உள்ளார் சமந்தா.
இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளார் சமந்தா.இவர் ஒரு ஆங்கில படத்தில் நடிப்பதை சமீபத்தில் அறிவித்துள்ளார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.
இவர் நடிக்கும் யசோதா என்ற படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடா,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
Incredible Actress @Samanthaprabhu2's multilingual film (Telugu, Tamil, Hindi, Kannada & Malayalam) titled #Yashoda. Shoot begins today🥳
— Sridevi Movies (@SrideviMovieOff) December 6, 2021
A @krishnasivalenk's unique venture directed by @hareeshnarayan & @dirharishankar under @SrideviMovieOff
DOP #MynaaSukumar#YashodaTheMovie pic.twitter.com/SipgjoJzrn
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM