தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களின் ஷூட்டிங்கில் பரபரப்பாக பங்கேற்று வருகிறார் சமந்தா.தற்போது சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ்.தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை சாந்தாரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.