தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சாம் ஜாம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா. 

இந்நிலையில் பெண் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கொடுத்த வாக்கை சமந்தா காப்பாற்றியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சமந்தா கலந்து கொண்ட போது, அங்கு போட்டியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த பெண் தெரிவித்தார். அதனை கேட்டு வருந்திய நடிகை சமந்தா, அவரின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

அதன்படி அந்த பெண்ணுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒரு கார் ஒன்று வாங்கி தருவதாகவும், அதை வைத்து டிராவல்ஸ் நடத்தினால் அதிகப்படியான வருமானம் பெறலாம் என்று அந்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கினார். 

சொன்னபடி அந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. கஷ்டப்படும் ஏழைப் பெண்ணுக்கு நடிகை சமந்தா உதவியது ரசிகர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சமந்தாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. சமந்தாவின் இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

samantha gifts a luxurious car to a woman auto driver fulfills her promise