தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்தியாவின் பழம்பெரும் புலவர் காளிதாசர் எழுதிய புராண காவியத்தை தழுவி உருவாகும் சகுந்தலம் திரைப்படத்தில், சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா -  நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.இவர்களது விவாகரத்துக்கான காரணங்கள் என்ன என்று சமூக வலைதளங்களில் பலவிதமான வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சமந்தா தற்போது தனது மௌனத்தை கலைத்து பதிலளித்துள்ளார். இதுகுறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில்,

“என் வாழ்வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக உங்கள் அனைவரின் உணர்ச்சிப்பூர்வமான அன்பு என்னை மூழ்கடித்தது... என் மீதான தவறான குற்றச்சாட்டுகளுக்கும் வதந்திகளுக்கும் எதிராக நீங்கள் காட்டிய அக்கறைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி... நான் வேறு ஒருவரை விரும்புகிறேன்... குழந்தைகள் வேண்டாம் என்றேன்... கருக்கலைப்பு செய்து கொண்டேன் மற்றும் நான் ஒரு சந்தர்ப்பவாதி என அவர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்...விவாகரத்து என்பது மிகவும் வலிமிகுந்த செயல்பாடு... இதிலிருந்து நான் மீண்டு வர சில காலம் ஆகும்... இது போன்ற என்மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து இடைவிடாது நடக்கின்றன... ஆனால் நான் ஒரு போதும் இவற்றை அனுமதிப்பதில்லை… அவர்கள் பேசுவது போல் நடந்து கொண்டதும் இல்லை... உடைந்து விடப் போவதுமில்லை…”

என தெரிவித்துள்ளார்.