திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா. 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா உடற்பயிற்சி, யோகா, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா. 

சமந்தா, நாக சைதன்யா திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இந்த நிலையில் சமந்தா கர்ப்பம் என அடிக்கடி செய்திகள் வருவதும் வாடிக்கை ஆகி விட்டது. அப்படி செய்தி பரவுதும் அதன் பிறகு சமந்தா அது முற்றிலும் வதந்தி என விளக்கம் அளிப்பதும் அடிக்கடி நடந்திருக்கிறது. இந்நிலையில் சமந்தா இன்று இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ரசிகர்கள் உடன் உரையாடினார். ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளிப்பதாக அவர் கூறிய நிலையில் பலரும் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் சுவாரஸ்யமான சில கேள்விகளுக்கு அவர் பதில் கூறினார். 

நீங்கள் கர்ப்பமா? என ஒருவர் கேள்வி கேட்க அதற்கு சமந்தா கூலாக பதில் ஒன்றை தந்துள்ளார். நான் 2017ல் இருந்து ப்ரெக்னென்ட் என நினைக்கிறேன். இந்த பேபி வெளியில் வர விரும்பவில்லை போல தெரிகிறது என சமந்தா அந்த நபருக்கு பதிலாக கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் அவர் தனது முதல் வெப் சீரிஸானா தி ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனுக்கு டப்பிங் பேசி முடித்திருக்கிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கி இருக்கும் அந்த சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியா மணி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் மட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் சமந்தா முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் நயந்தாரா ஜோடியாக நடிக்க உள்ளனர். லாக் டவுன் முடிந்த பிறகு அதன் ஷூட்டிங் நடைபெற உள்ளது.