தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான சமந்தா கடைசியாக தமிழில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் சூப்பர் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்காக வந்த ஜானு திரைப்படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிய பாலிவுட் வெப்சீரிஸ்ஸான ஃபேமிலி மேன் 2-வில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சமந்தா அடுத்ததாக தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் நடிகை சமந்தா. இந்தியாவின் புகழ்மிக்க புலவர்களில் ஒருவரான மகாகவி காளிதாசர் இயற்றிய பிரபலமான இலக்கியங்களில் ஒன்றான அபிஞானஷாகுந்தலம் படைப்பின் இலக்கிய கதாபாத்திரமான ஷகுந்தலா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார். 

நடிகை சமந்தா உடன் இணைந்து நடிகர் தேவ் மோகன், நடிகை அதிதி பாலன், நடிகர் மோகன்பாபு, நடிகை கௌதமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஷாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடிய படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ...