தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.இவர் நடிப்பில் 96 ரீமேக் திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வந்தார் சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா உடன் இவர் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

அமேசான் ப்ரைம்மில் வெளியாகி செம ஹிட் அடித்திருந்த வெப் சீரிஸ் The Family Man, மனோஜ் பாஜ்பாய் , ப்ரியாமணி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.இதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே சில நாட்களுக்கு முன் வெளியானது.இதில் சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சீரிஸின் ட்ரைலர் வெளிவந்தது முதலே பல சர்ச்சைகள் இந்த தொடரை தொற்றிக்கொண்டது.பலர் இந்த சீரிஸ் தமிழர்களுக்கு எதிராக உள்ளது என்று போர்க்கொடி தூக்கினர்.இந்த சீரிஸ் ரிலீசாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இருந்தாலும் இன்னும் சிலர் இந்த சீரிஸில் ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சீரிஸில் சமந்தாவின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.ட்ரைலரை பார்த்து பல எதிர்ப்புகளை சந்தித்த சமந்தாவிற்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றது.இந்த தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும்,அந்த காதாபாத்திரத்துக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.இந்த காதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து மிகவும் யோசித்ததாகவும்,அவர்கள் அனுபவித்த பல கஷ்டங்கள் பற்றி தெரிஞ்சுகொண்டு மிகவும் வேதனைபட்டேன் என்றும் இந்த கேரக்டர் மிகவும் ஸ்பெஷல் என்றும் தெரிவித்துள்ளார்.