அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். 

படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த ஆண்டு நிவர் புயலின் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் கொட்டும் மழையில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சாக்ஷி. சாக்ஷி பதிவிடும் ஃபிட்னஸ் டிப்ஸால் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலம் கூடியது. 

ஆர்யா நடித்த டெடி, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி. இந்த ஆண்டு சாக்ஷிக்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். நந்தா இயக்கிய 120 hours திரைப்படமாகும். 

இந்நிலையில் நான் கடவுள் இல்லை படத்தின் அப்டேட் ஒன்றை கூறியுள்ளார் சாக்ஷி. இயக்குனர் SA சந்திர சேகர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் முக்கிய ரோலில் நடிக்கிறார். கடந்த ஆண்டு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்து தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. 

இந்த படத்திற்கு முன்னர் ஜெய் நடித்த கேப்மாரி படத்தை இயக்கினார் SAC. படத்தில் அதுல்யா மற்றும் வைபவி நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக சறுக்கல்களை சந்தித்தாலும், இளைஞர்கள் விரும்பும் படமாக அமைந்தது.