இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

SakshiAgarwal

இந்நிலையில் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காலா படத்தில் நடித்தது குறித்து பதிவு செய்துள்ளார். அந்த காலங்களை ரொம்பவே மிஸ் செய்வதாக பகிர்ந்துள்ளார். காலா படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள், தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்ததாகவும் பதிவு செய்துள்ளார். 

SakshiAgarwal

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா படத்தில் நடித்திருப்பார் சாக்ஷி. சாக்ஷி கைவசம் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்திலும், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது.